LOADING

History

வடுகர்பேட்டை ஆரோக்கிய அன்னையின் திருத்தல வரலாற்றுச் சுவடுகள்

1. பங்கின் தோற்றம்:
1665-ம் ஆண்டு

2. பணியாளர்களும், முதல் பங்கு தந்தையும் :
மதுரை மிஷன் சேசு சபையினர் அருட்திரு வின்சென்ட் டுவார்ட் சே.ச

3. மதுரை மிஷன் தலைமை பீடமும், முதல் தலைவரும்:
போக்குவரத்து வசதி, இட அமைப்பு, இயற்கை வளம் போன்ற காரணங்களால் வடுகர்பேட்டை மதுரை மிஷனின் தலைமை பீடமாகியது. பேரருள் திரு.எம்மானு வேல் ரோட்ரீகஸ் அடிகள் சே.ச.1676

4. புனித அருளானந்தர் காலம்:
1680 - 81 ஆம் ஆண்டு

5.வீரமாமுனிவர் பணிக்காலம்:
1717 முதல் 1720 வரை. இக்காலம் வடுகர்பேட்டையின் பொற்காலமாகும். இந்த ஆலயத்தின் மையமாகிய நடுப்பகுதியும் அதில் மணிலாவிலிருந்து அவரால் கொண்டு வரப்பட்ட ஆரோக்கிய அன்னையின் திருவுருவம் அமைக்கப்பட்டது. இக்காலத்தில்தான் இது திருத்தலமாக உருவானது.

6.நவாப் நன்கொடை:
1760-ல் திருச்சிராப்பள்ளி நவாப்பால் பெருமளவு நிலங்கள் வடுகர்பேட்டை கோவிலுக்கு மான்யமாக கொடுக்கப்பட்டது.

7.ஆலய வளர்ச்சி:
கோவிலின் மற்ற பாகங்கள் பகுதி, பகுதியாக கட்டப்பட்டன. முன்சாலை 1831.இருபுறமுள்ள பக்க சாலைகள் 1850. பின்புற பகுதி 1888. பங்குத்தந்தையின் இல்லம் 1863.

8.குருவின் தியாகம்:
வடுகர்பேட்டையின் பங்குத் தந்தையும் மதுரை மிஷனின் தலைவருமாயிருந்த பேரருட்திரு. அந்தோணி பிரான்சுவா ரிக்கார்டி அடிகள் மொகலாய வீரர்களால் 1734 ல் ஈட்டியால் குத்தப்பட்டார். 1735 செப்டம்பர் 22-ம் நாள் இறைவனில் துயில் கொண்டார்.

9. கோவா மாநில குருக்களின் பொறுப்பு:
1777 ஆம் ஆண்டு முதல் 1845 வரை.

10. பாரில் வேத போதக சபையினர் பொறுப்பு:
1845 - 1899

11. ஆலய மணி :
இந்த கோவிலின் மணி அருள்மிகு மேத் சுவாமிகள் அவர்களால் பிரான்சிலிருந்து கொண்டுவரப்பட்டு மரியலு என்ற பெயரிட்டு ஆலயத்தில் ஓலிக்கச் செய்யப்பட்டது.

12. குடந்தை மறைமாவட்டம் பொறுப்பு:
1899 முதல்

13. கோயிலின் முன் கோபுரம்:
1904 எழச் செய்தவர் அருள்மிகு. பர்லொன் அடிகள் இதை முழு கோபுரமாக கட்டி முடித்தவர் அருள்திரு. சூசை நாதர் 1966.

14. லூர்து அன்னை கெபி. நுழை வாயில் :
1988, அருள்திரு. அந்தோணிசாமி அடிகள்.

15. புதிய ஆலயம் எழுப்பபட்டது:
1997 -ஆம் ஆண்டு அருள்திரு T.ஜோசப் அவர்களால் புதிய ஆலயம் எழுப்பபட்டது. மாதாகுளம், செபமாலை ரகசியங்கள் சுரூப வடிவில் அமைக்கப்பட்டது.
2002 - அருள்திரு A. பிரான்சிஸ் பழைய ஆலயத்தை புதுப்பித்தார்.
2005 - அருள்திரு அந்தோணி ஜோசப் - அன்னையின் கெபியை புதுப்பித்தார் - புனித அந்தோணியார்- குழந்தை இயேசு - சிறிய கெபியை உருவாக்கினார்.
2011 - முதல் அருள்திரு S.அகுஸ்தின் பங்குத்தந்தையாக பணியாற்றுகிறார்.

16. திருத்தல ஆண்டுத் திருவிழா :
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு திங்கள் 30 ஆம் நாள் கொடி ஏற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8 ஆம் நாள் மாலை தமிழ் பண்பாடு நயமிக்க பெரிய தேர் பவனியும் மறுநாள் மாலை கொடி இறக்கத்துடன் முடிவு பெறும். நவநாட்களில் ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடுகளும், இரவு சப்பர பவனியும் இடம் பெறும். நோயாளிகள் மந்திரிக்கப்படுவர்.


வடுகர்பேட்டையில் இறைபணியாற்றிய திருமறைக் குருக்கள்

மதுரை மிஷன் ஆளுகையின் கிழ்

  • கி.பி. 1674-1676 : அருள்திரு. வின்சென்ட் டுவார்ட் சே.ச.
  • கி.பி. 1676-1679 : அருள்திரு. எம்மானுவேல் ரோட்ரீகஸ் சே.ச.
  • கி.பி. 1679-1682 : அருள்திரு. ஜோசப் தெசில்வா சே.ச.
  • கி.பி. 1682-1683 : அருள்திரு. அந்திரே பிரேர் சே.ச.
  • கி.பி. 1683-1688 : அருள்திரு. ரோட்ரீகஸ் சே.ச.
  • கி.பி. 1688-1708 : அருள்திரு. எம்மானுவேல் நுனேஸ் சே.ச.
  • கி.பி. 1708-1712 : அருள்திரு. எம்மானுவேல் தெரெஸ் சே.ச.
  • கி.பி. 1712-1713 : அருள்திரு. பியர் மார்டின் சே.ச.
  • கி.பி. 1712-1713 : அருள்திரு. லூயிஸ் நோயெல் தெபூர் ஜெஸ் சே.ச.
  • கி.பி. 1713-1717 : அருள்திரு. வீரமாமுனிவர் (ஜோசப் காண்ஸ்டன்டைன் பெஸ்கி) சே.ச.
  • கி.பி. 1727-1735 : அருள்திரு. அந்துவான் பிரான்சுவா ரிக்கார்டி சே.ச.
  • கி.பி. 1735-1743 : அருள்திரு. தோமினிக் மதெய்ரா சே.ச.
  • கி.பி. 1743-1745 : அருள்திரு. சால்வாத்தோர் தெரெய்ஸ் சே.ச.
  • கி.பி. 1745-1747 : அருள்திரு. ஒர்ட்டி சே.ச.
  • கி.பி. 1747-1748 : அருள்திரு. ஜான் தெ ஊரெம் சே.ச.
  • கி.பி. 1748-1756 : அருள்திரு. எம்மானுவேல் பாரேய்ரோஸ் சே.ச.


கோவா அதிமேற்றிராணியாரின் ஆளுகையின் கிழ்

  • கி.பி. 1756-1845 : கோவா அதிமேற்றிராணியாரின் நேரடிப் பார்வை


பாரிஸ் அந்திய வேதபோதக சபை பாண்டிச்சேரி மறைமாவட்ட ஆளுகையின் கிழ்

  • கி.பி. 1845-1846 : அருள்திரு. லேகூஸ்ட்(ஞானாதிக்கர்)
  • கி.பி. 1846-1846 : அருள்திரு. பாஜெஸ் M.E.P
  • கி.பி. 1846-1856 : அருள்திரு. ரோஜர் M.E.P
  • கி.பி. 1856-1863 : அருள்திரு. பிசார்டு M.E.P
  • கி.பி. 1863-1866 : அருள்திரு. பார்பே M.E.P
  • கி.பி. 1866-1867 : அருள்திரு. லியோன் M.E.P
  • கி.பி. 1867-1868 : அருள்திரு. பியர் M.E.P
  • கி.பி. 1868-1873 : அருள்திரு. லாப் M.E.P
  • கி.பி. 1873-1874 : அருள்திரு. ரெனேவியர் M.E.P
  • கி.பி. 1874-1878 : அருள்திரு. போர் M.E.P
  • கி.பி. 1878-1881: அருள்திரு. பாரலோன் M.E.P
  • கி.பி. 1881-1890 : அருள்திரு. வெல்டர் M.E.P
  • கி.பி. 1890-1893 : அருள்திரு. நியேல் M.E.P
  • கி.பி. 1893-1899 : அருள்திரு. மேத் M.E.P


குடந்தை மறைமாவட்ட ஆளுகையின் கிழ்

  • கி.பி. 1899-1916 : அருள்திரு. பாரலோன்
  • கி.பி. 1916-1921 : அருள்திரு. பீட்டர் பிரான்சிஸ்
  • கி.பி. 1921-1927 : அருள்திரு. இரத்தினம்
  • கி.பி. 1927-1931 : அருள்திரு. A.S. லூர்து
  • கி.பி. 1931-1932 : அருள்திரு. J.M. ரோச்
  • கி.பி. 1932-1934 : அருள்திரு. அந்தோணி ஜோசப்
  • கி.பி. 1934-1944 : அருள்திரு. மரிய பிரான்சிஸ்
  • கி.பி. 1944-1945 : அருள்திரு. ரோச் மாணிக்கம்
  • கி.பி. 1945-1946 : அருள்திரு. M.P. சின்னப்பர்
  • கி.பி. 1946-1947 : அருள்திரு. A. செபஸ்தியான்
  • கி.பி. 1947-1951 : அருள்திரு. ஜார்ஜ் கடந் தோட்
  • கி.பி. 1951-1953 : அருள்திரு. மரிய ஆரோக்கியம்
  • கி.பி. 1953-1963 : அருள்திரு. G. ஆரோக்கியசாமி
  • கி.பி. 1963-1969 : அருள்திரு. G. சூசை
  • கி.பி. 1969-1969 : அருள்திரு. A. உபகாரசாமி
  • கி.பி. 1969-1971 : அருள்திரு. M.P. சின்னப்பர்
  • கி.பி. 1971-1981 : அருள்திரு. K. சூசை மாணிக்கம்
  • கி.பி. 1981-1986 : அருள்திரு. A. சாம்ஸன்
  • கி.பி. 1986-1992 : அருள்திரு. S. அந்தோணிசாமி
  • கி.பி. 1992-1998 : அருள்திரு. T. ஜோசப்
  • கி.பி. 1998-2003 : அருள்திரு. A. பிரான்சிஸ்
  • கி.பி. 2004-2010 : அருள்திரு. A. அந்தோணி ஜோசப்
  • கி.பி. 2010- till date : அருள்திரு. S. அகுஸ்தின்